​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
நிணநீரில் நோய்த்தொற்றைக் கண்டறியும் கருவியை உருவாக்கும் முயற்சி

Published : Apr 01, 2020 1:14 PM

நிணநீரில் நோய்த்தொற்றைக் கண்டறியும் கருவியை உருவாக்கும் முயற்சி

Apr 01, 2020 1:14 PM

நிணநீர் சோதனை மூலம் கொரோனா வைரஸ் உள்ளதா என்பதைக் கண்டறியும் கருவி ஓரிரு மாதங்களில் பயன்பாட்டுக்கு வரும் என மருத்துவ ஆராய்ச்சிக் குழு அதிகாரி தெரிவித்துள்ளார்.

இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் குழுவின் புனே வைரஸ் ஆய்வகம் கொரோனா வைரசை ஆய்வுக்காகச் சேகரித்து வைத்துள்ளது. இது சோதனைக் கருவிகள் தயாரிப்பு, குணமாக்கும் மருந்து, தடுப்பு மருந்து கண்டுபிடிப்பதில் உதவும் என மருத்துவ ஆராய்ச்சிக் குழுவின் தொற்றுநோயியல் பிரிவுத் தலைவர் கங்காகேட்கர் தெரிவித்துள்ளார். நிணநீரில் இருந்து நோய்த்தொற்றைக் கண்டறியும் கருவி ஓரிரு மாதங்களில் உருவாக்கப்படும் எனவும் அவர் தெரிவித்தார்.

கொரோனா தொடர்பான ஆராய்ச்சிக்காக மருத்துவ ஆராய்ச்சிக் குழு, உயிரித் தொழில்நுட்பத்துறை, அறிவியல் தொழில்நுட்பத்துறை, அணுவாற்றல் துறை, பாதுகாப்பு ஆராய்ச்சி அமைப்பு ஆகியவற்றின் அறிவியலாளர்கள் அடங்கிய ஒருங்கிணைப்புக் குழு அமைக்கப்பட்டுள்ளதாகவும் கங்காகேட்கர் தெரிவித்தார்.