​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
கங்குலியிடம் கிடைத்த ஆதரவு தோனி, கோலியிடம் கிடைக்கவில்லை: யுவராஜ்

Published : Apr 01, 2020 12:23 PM

கங்குலியிடம் கிடைத்த ஆதரவு தோனி, கோலியிடம் கிடைக்கவில்லை: யுவராஜ்

Apr 01, 2020 12:23 PM

சவுரவ் கங்குலியிடம் கிடைத்த ஆதரவு, மகேந்திர சிங் தோனி, விராட் கோலியிடம் இருந்து தனக்கு கிடைக்கவில்லை என்று இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் அதிரடி ஆட்டக்காரர் யுவராஜ் சிங் தெரிவித்துள்ளார்.

இந்திய அணி கேப்டனாக கங்குலி இருந்தபோது, 2000ம் ஆண்டில் நடைபெற்ற சாம்பியன்ஸ் கோப்பை தொடரில் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான போட்டியில் யுவராஜ் அறிமுகமானார்.

கங்குலிக்கு பிறகு, டிராவிட், சேவாக்,  தோனி, கோலி ஆகியோரின் கேப்டன்சிப்பிலும் விளையாடியுள்ளார்.

2019ம் ஆண்டில் அனைத்து வகை கிரிக்கெட்டிலும் ஓய்வு பெற்ற அவர், தற்போது அளித்துள்ள பேட்டியில், கங்குலி தலைமையின்கீழ் அதிக போட்டிகளில் விளையாடி இருப்பதாகவும், அப்போது அவர் தனக்கு அதிக ஆதரவு அளித்ததாகவும் தெரிவித்துள்ளார்.