​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
124 ஆண்டுக்கால வரலாற்றிலேயே முதன்முறையாக ஒலிம்பிக் போட்டி தள்ளி வைப்பு

Published : Mar 30, 2020 6:47 PM

124 ஆண்டுக்கால வரலாற்றிலேயே முதன்முறையாக ஒலிம்பிக் போட்டி தள்ளி வைப்பு

Mar 30, 2020 6:47 PM

டோக்கியோவில் நடைபெற இருந்த ஒலிம்பிக் போட்டிகள் அடுத்த ஆண்டு ஜூலை, ஆகஸ்டு மாதங்களில் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த ஆண்டு ஜூலை, ஆகஸ்டு மாதங்களில் ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் நடைபெற இருந்த ஒலிம்பிக் போட்டி கொரோனா அச்சுறுத்தலால் தள்ளி வைக்கப்பட்து. போட்டிகளை எந்தத் தேதியில் நடத்துவது என்பது குறித்துப் பன்னாட்டு ஒலிம்பிக் கழகமும் ஜப்பான் ஒலிம்பிக் சங்கமும் பேச்சு நடத்தி வந்தன.

இந்நிலையில் அடுத்த ஆண்டு ஜூலை 23ஆம் தேதி முதல் ஆகஸ்டு எட்டாம் தேதி வரை ஒலிம்பிக் போட்டிகள் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மாற்றுத் திறனாளிகளுக்கான பாராலிம்பிக் போட்டி 2021 ஆகஸ்டு 24 முதல் செப்டம்பர் 5 வரை நடைபெறும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

நவீன ஒலிம்பிக் போட்டியின் 124 ஆண்டு கால வரலாற்றிலேயே முதன்முறையாக இப்போது தான் முதன்முறையாகத் தள்ளி வைக்கப்பட்டுள்ளது.