​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
கூடுதல் வென்டிலேட்டர்களுக்கு ஏற்பாடு

Published : Mar 30, 2020 4:50 PM



கூடுதல் வென்டிலேட்டர்களுக்கு ஏற்பாடு

Mar 30, 2020 4:50 PM

அடுத்த 2 மாதங்களில் 30 ஆயிரம் வென்டிலேட்டர்களை தயாரிப்பதற்கான ஆர்டர் பெல் எனப்படும் பாரத் மின்னணுவியல் நிறுவனத்திற்கு வழங்கப்பட்டுள்ளது.

பெங்களூருவை தலைமையகமாக கொண்டுள்ள பெல்லுக்கு சென்னை, காசியாபாத், மும்பை, ஐதராபாத் உள்ளிட்ட நகரங்களில் உற்பத்தி ஆலைகள் உள்ளன.

டெல்லி, நொய்டாவில் உள்ள ஆகவ் ஹெல்த்கேர் என்ற நிறுவனத்திற்கு 10 ஆயிரம் வென்டிலேட்டருக்கான ஆர்டர் வழங்கப்பட்டு ஏப்ரல் 2 ஆம் வாரம் அவை கிடைக்கத் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனிடையே  இரண்டு உள்நாட்டு நிறுவனங்கள் நாளொன்றுக்கு 50 ஆயிரம் என்ற எண்ணிக்கையில் N95  மாஸ்க் தயாரிப்பில் ஈட்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.

ஒரு வாரத்தில்  இந்த எண்ணிக்கை  ஒரு லட்சமாக அதிகரிக்கும் எனவும் அது தெரிவித்துள்ளது. நாட்டில் உள்ள மருத்துவமனைகளில் 11 லட்சத்து 95 ஆயிரம் N95  மாஸ்குகள் இருப்பு உள்ளதாக தெரிவித்துள்ள சுகாதார அமைச்சகம், கடந்த 2 நாட்களில் 5 லட்சம் மாஸ்குகள் விநியோகிக்கப்பட்டதாகவும், இன்று ஒருலட்சத்து 40 ஆயிரம் மாஸ்குகள் வழங்கப்படுவதாகவும் தெரிவித்துள்ளது.