​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
கொரோனா தாக்கம்.. திணறும் உலக நாடுகள்..!

Published : Mar 30, 2020 4:24 PM

கொரோனா தாக்கம்.. திணறும் உலக நாடுகள்..!

Mar 30, 2020 4:24 PM

உலகம் முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 7 லட்சத்து 30 ஆயிரத்தை கடந்துள்ள நிலையில், பலியானவர்களின் எண்ணிக்கை 34 ஆயிரத்து 500க்கும் மேல் அதிகரித்துள்ளது. ஸ்பெயினில் இன்று ஒரே நாளில் 537 பேர் உயிரிழந்துள்ளனர்.

சீனாவிலிருந்து பரவத் தொடங்கிய கொரோனா வைரஸ் உலக நாடுகளில் கோரத்தாண்டவம் ஆடி வருகிறது. சர்வதேச அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 7 லட்சத்து 30 ஆயிரத்து 326 ஆக உயர்ந்துள்ளது. கொரோனா பாதிப்பால் 34 ஆயிரத்து 572 பேர் உயிரிழந்துள்ளனர்.

அதிகபட்சமாக அமெரிக்காவில் 1 லட்சத்து 42 ஆயிரத்து 737 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், அதற்கடுத்த படியாக இத்தாலியில் 97 ஆயிரத்து 689 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். ஸ்பெயினில் இன்று ஒரே நாளில் 5,085 பேருக்கு புதிதாக பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதை அடுத்து, அங்கு பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 85 ஆயிரத்து 195 ஆக உயர்ந்துள்ளது. கொரோனாவின் பிறப்பிடமான சீனாவில் 81 ஆயிரத்து 470 பேர் பாதிக்கப்பட்டுள்ளன நிலையில், ஜெர்மனி, பிரான்ஸ், ஈரான், இங்கிலாந்து உள்ளிட்ட நாடுகளில் பாதிப்பு அதிகரித்துள்ளது.

உயிரிழப்புகளை பொறுத்தவரை அதிகபட்சமாக இத்தாலியில் இதுவரை 10 ஆயிரத்து 779 பேர் கொரோனாவுக்கு பலியாகியுள்ளனர். ஸ்பெயினில் இன்று ஒரே நாளில் 537 பேர் உயிரிழந்ததை அடுத்து, பலி எண்ணிக்கை 7,340ஆக உயர்ந்துள்ளது. தற்போது வரை சீனாவில் 3,304 பேரும், அமெரிக்காவில் 2,489 பேரும் உயிரிழந்துள்ளனர்.

இதனிடையே இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நேதன்யாகுவின் உதவியாளருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. அதே சமயம் பெஞ்சமின் நேதன்யாகுவுக்கும் கொரோனா பாதிப்பு பரவியுள்ளதா என்பது குறித்து உறுதி செய்யப்படவில்லை.

இதனிடையே உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டிருந்த 1 லட்சத்து 54 ஆயிரத்து 262 பேர் சிகிச்சைக்கு பின்னர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.