​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
தமிழகத்தில் மேலும் 17 பேருக்கு கொரோனா பாதிப்பு

Published : Mar 30, 2020 12:22 PM

தமிழகத்தில் மேலும் 17 பேருக்கு கொரோனா பாதிப்பு

Mar 30, 2020 12:22 PM

25 லட்சம் N-95 மாஸ்குகள் உட்பட, ஒன்றரை லட்சம் முகக் கவசங்களுக்கு ஆர்டர் கொடுக்கப்பட்டுள்ளதாக, முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். கொரோனா பரிசோதனைக்கு பயன்படும், 30 ஆயிரம் டெஸ்ட் கிட் ஆர்டர் செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.

கொரோனா தடுப்பு மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து தலைமைச் செயலகத்தில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி விரிவாக ஆலோசனை நடத்தினர். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், கொரோனாவுக்கு சிகிச்சை அளிப்பதற்கான தனி வார்டுகள், வென்டிலேட்டர்கள் குறித்த விவரங்களை தெரிவித்தார்.

கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று 5 பேர் குணமாகி வீடு திரும்பியிருப்பதாகவும், 43 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் வீடுகளில் கண்காணிக்கப்பட்டு வருவதாகவும் முதலமைச்சர் தெரிவித்தார். 121 பேரின் கொரோனா பரிசோதனை முடிவுகள் வர வேண்டியுள்ளதாகவும் அவர் கூறினார்.

தனிமைப்படுத்திக் கொண்டால் மட்டுமே கொரோனாவில் இருந்து தப்ப முடியும் என்று கூறிய முதலமைச்சர், கொரோனா அறிகுறி இருக்கும் நபர்களை மட்டுமே பரிசோதிக்க அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது என்றார்.

தமிழக அரசு இது போன்ற ஒரு சவாலான நிலையை எதிர்கொண்டது இல்லை என்று குறிப்பிட்ட முதலமைச்சர், இந்த விவகாரத்தில் அனைத்து கட்சி கூட்டத்தை கூட்ட வேண்டிய அவசியம் இருக்கிறதா என தனக்கு தெரியவில்லை என பதிலளித்தார்.