​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
பீகாருக்குத் திரும்பிய ஒன்றரை லட்சம் தொழிலாளர்கள்

Published : Mar 30, 2020 9:55 AM

பீகாருக்குத் திரும்பிய ஒன்றரை லட்சம் தொழிலாளர்கள்

Mar 30, 2020 9:55 AM

பல்வேறு மாநிலங்களில் பணியாற்றி வந்த ஒன்றரை லட்சம் தொழிலாளர்கள் பீகாருக்குத் திரும்பி வந்துள்ளனர்.

டெல்லி எல்லையில் குழுமிய பல்லாயிரக்கணக்கானோர் ஆயிரத்துக்கும் மேற்பட்ட பேருந்துகள் மூலம் சொந்த ஊருக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். இதில் பெரும்பாலானவை பீகாருக்குள் நுழைந்தன. ஏற்கனவே ஊரடங்கு அமல்படுத்தப்படுவதற்கு முந்தைய நாளில் சிறப்பு ரயில்கள் மூலம் 58 ஆயிரம் தொழிலாளர்கள் பீகாருக்கு வந்து 14 நாட்களுக்கு ரயில் நிலையங்களிலேயே தங்க வைக்கப்பட்டு தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.

பாதிக்கப்பட்ட தொழிலாளர்களுக்கு உணவு வழங்க முதலமைச்சர் நிதிஷ் குமார் 100 கோடி ரூபாய் நிதியை ஒதுக்கியுள்ளார். திடீரென லட்சக்கணக்கில் மக்களை அனுப்புவது சரியல்ல என்றும் இதனால் ஊரடங்கு உத்தரவின் முக்கிய நோக்கமே நிறைவேறாமல் போய் விடும் என்றும் தமது அதிருப்தியை தெரிவித்து நிதிஷ்குமார் மத்திய அரசுக்கு கடிதம் அனுப்பியுள்ளார்.