​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
கொரோனாவை பாட்டாலே சொல்லி அடிக்கும் பாடகர்கள்..! போலீசுக்கு ஒத்துழைப்போம்

Published : Mar 29, 2020 7:13 AM



கொரோனாவை பாட்டாலே சொல்லி அடிக்கும் பாடகர்கள்..! போலீசுக்கு ஒத்துழைப்போம்

Mar 29, 2020 7:13 AM

தமிழகத்தில் வீட்டை விட்டு வெளியில் வருவோர்களுக்கு லத்தியால் வேட்டு வைக்கும் போலீசாருக்கு ஆதரவாக, வீட்டுக்குள் இருந்தே கொரோனா குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தி வரும்  நம்ம ஊரு பாட்டுக்காரர்கள் குறித்து விவரிக்கின்றது இந்த செய்தி தொகுப்பு.

வீட்டில் இருங்கள் என்றாலும் கேட்காமல் சாலையிலும், சந்தையிலும், கூட்டமாகவும், கொரோனா குறித்த விழிப்புணர்வு இல்லாமலும் சுற்றி திரியும் திருக்கோவிலூர் வாசிகளுக்கு இந்த பாட்டை கேட்டாவது புத்தியில் உரைக்குமா..!

கூட்டமாக செல்லாதீர்கள் என்ற விழிப்புணர்வோடு போலீசிடம் ஏட்டிக்கு போட்டியாக பேசி முட்டிவைத்தியம் பெற்ற தம்பிக்கும் நச் என்று குட்டு வைக்கிறார் நம்ம ஊரு பாட்டுக்காரர் முத்து இருளாண்டி...

சென்னை அண்ணா சாலையில் தடையை மீறி சுற்றித்திறிந்த வாகன ஓட்டிகளின் வாகனங்களுக்கும் வாகன ஓட்டிகளின் கைகளுக்கும் மஞ்சள் பெயிண்டால் காவல்துறையினர் நலுங்கு வைத்துக் கொண்டிருக்க தேனி ஆடிட்டர் ஜெகதீஷின் வரிகளுக்கு முகேஷ் குழிவினர் பாட்டால் பட்டையை கெளப்பினர்..!

ஊருக்குள் அடிக்கடி சுற்றும் வாகனங்களை எளிதில் அடையாளம் காணும் முயற்சியாக காவல் ஆய்வாளர் ஒருவர் செய்த இந்த சிறப்பான நலுங்கு கவனிப்பில் போலீஸ்காரரே சிக்கியதால் மஞ்சள் பூசும் வைபவம் களைகட்டியது.

சேலம் அஸ்தம்பட்டியில் வீதியில் சுற்றி போலீசிடம் சிக்கிய வாகன ஓட்டிகளை சிறுவர்கள் போல வாகனத்தை சுற்றிவரவைத்து கொரோனா விழிப்புணர்வு ஏற்படுத்த, பாடகர் வேல்முருகன் தனது பாடலால் விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.

கொரோனா குறித்த விழிப்புணர்வு பாடல்களை பாடி பட்டையை கிளப்பிய நம்ம ஊரு பாட்டுக்காரர்களுக்கு டஃப் கொடுக்கும் வகையில் போலீஸ்காரர் ஒருவரே மரணமாசாக பாடி விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.

பாடலில் உள்ள கருத்தைகேட்டு மக்கள் கொரோனா பரவுதலை தடுக்கும் விதமாக விழிப்புணர்வுடன் நடந்து கொண்டாலே பாடிய படலுக்குரிய பலன் மக்களுக்கு கிட்டும்..!