​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
வாடிக்கையாளர்கள் பணம் எடுப்பதற்காக நடமாடும் ஏடிஎம் வசதி

Published : Mar 28, 2020 4:35 PM

வாடிக்கையாளர்கள் பணம் எடுப்பதற்காக நடமாடும் ஏடிஎம் வசதி

Mar 28, 2020 4:35 PM

சென்னை மாநகரின் முதன்மையான இடங்களில் நடமாடும் ஏடிஎம்களைக் குறிப்பிட்ட நேரத்தில் நின்று செல்வதற்கு இந்தியன் வங்கி ஏற்பாடு செய்துள்ளது.

இந்தியன் வங்கி வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், அனைத்துக் கிளைகளிலும் வாடிக்கையாளர்களுக்கான சேவைகள் வழங்கப்படுவதாகக் குறிப்பிட்டுள்ளது.

பணம் எடுப்பதற்காக வாடிக்கையாளர்கள் நெடுந்தொலைவு செல்வதைத் தவிர்க்கச் சென்னையின் முதன்மையான 10 இடங்களில் நடமாடும் ஏடிஎம்கள் நின்று செல்வதற்கு வசதி செய்துள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளது.

முற்பகல் 10 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை ஒவ்வொரு நிறுத்தத்திலும் 40 நிமிடங்கள் வரை இந்த நடமாடும் ஏடிஎம் நின்று செல்லும்.