​​ ரூ. 4 லட்சத்துக்கு மேல் கல்விக் கடன் பெற சொத்து உத்தரவாதம் அளிக்க வேண்டும் - சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு
Polimer News
Polimer News Tamil.
Advertisement
ரூ. 4 லட்சத்துக்கு மேல் கல்விக் கடன் பெற சொத்து உத்தரவாதம் அளிக்க வேண்டும் - சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு

ரூ. 4 லட்சத்துக்கு மேல் கல்விக் கடன் பெற சொத்து உத்தரவாதம் அளிக்க வேண்டும் - சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு

May 15, 2018 1:02 AM

4 லட்சம் ரூபாய்க்கு மேல் கல்விக் கடன் பெற  உத்தரவாதம் வேண்டும் என்ற வங்கி நிபந்தனை செல்லும் என  சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

காஞ்சிபுரம் ஸ்ரீ சத்ய சாய் மருத்துவ கல்லூரி  மாணவி சன்ஸ்கிரித், இந்தியன் வங்கியில் விண்ணப்பித்தும் கல்விக் கடன் கிடைக்கவில்லை எனக் கூறி தொடர்ந்த வழக்கில்,  4 லட்சம் ரூபாய்க்கு மேல் கல்விக் கடன் வழங்க சொத்து உத்தரவாதம் வேண்டும் என்ற இந்தியன் வங்கி பதில் மனு தாக்கல் செய்தது. இதனை ஏற்ற  நீதிபதி வைத்தியநாதன், ஏழைக் குடும்பத்தை சேர்ந்த  மாணவியின் விண்ணப்பதை பரிசீலித்து விதிகளின்படி, உரிய கடனை வழங்க உத்தரவிட்டார். சொத்து உத்தரவாதம் இல்லாமல் அதிக கல்விக் கடனை வழங்க வேண்டும் என மனுதாரர் உரிமை கோர முடியாது எனவும் நீதிபதி தெரிவித்தார்.