​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
12-ம் வகுப்பு தேர்வு முடிவுகள் SMS அனுப்பப்படும் - அமைச்சர் செங்கோட்டையன்

Published : May 15, 2018 12:56 AM

12-ம் வகுப்பு தேர்வு முடிவுகள் SMS அனுப்பப்படும் - அமைச்சர் செங்கோட்டையன்

May 15, 2018 12:56 AM

12-ம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியான இரண்டு நிமிடங்களில் தேர்வு எழுதிய மாணவர்களின் தொலைபேசி எண்ணுக்கு எஸ்.எம்.எஸ். அனுப்பப்படும் என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.

சென்னை தியாகராயநகரில், சுருக்கெழுத்தாளர் பயிற்சி மையத்தின்  80வது ஆண்டுவிழா நிகழ்ச்சியில் பங்கேற்ற அமைச்சர், சிபிஎஸ்இ-யை விட சிறப்பான பாடத்திட்டத்தை தமிழக அரசு உருவாக்கியிருப்பதாகக் கூறினார்.

பின்னர்  செய்தியாளர்களிடம்  பேசிய அவர்,  நீர் மேலாண்மை, நில மேலாண்மை, பெற்றோர் பாசம், தேசப்பற்று மேம்பாடு உள்ளிட்டவை குறித்து மாணவர்களுக்கு புதிய பாடத்திட்டத்தில் கற்பிக்கப்படும் என்றார்.  பள்ளிகள் திறப்பு தேதி ஜூன் 1 என்பதில் எவ்வித மாற்றமும் இல்லை என்றும் அவர்  விளக்கமளித்தார்.