​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
3D அச்சுப்பொறி மூலம் முககவசம் தயாரிக்கும் பணியில் ஈடுபட்டுள்ள மேஜிசியன்

Published : Mar 28, 2020 10:47 AM

3D அச்சுப்பொறி மூலம் முககவசம் தயாரிக்கும் பணியில் ஈடுபட்டுள்ள மேஜிசியன்

Mar 28, 2020 10:47 AM

அமெரிக்காவில் இளைஞர் ஒருவர் கொரோனா அச்சுறுத்தலால் வீட்டுக்குள் முடங்கிக் கிடக்கும் நேரத்தை தற்போதைய சூழலுக்கு பயன் உள்ளதாக மாற்றும்பொருட்டு, 3டி அச்சுப்பொறி மூலம் முககவசம் தயாரிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளார்.

ஓக்லஹோமா (Oklahoma) நகரத்தைச் சேர்ந்த மேஜிசியனான ஜோ, தனது வீட்டிலேயே 3டி அச்சுபொறியை ஒன்றை உள்ளமைத்து, அதன் மூலம் முககவசங்களை தயாரித்து இலவசமாக தனது நண்பர்களுக்கு வழங்கி வருகிறார். ஒரு முககவசம் தயாரிக்க மூன்றரை மணி நேரம் ஆனாலும், தற்போதைய தட்டுப்பாட்டுக்கு சிறு துரும்பாக உதவும் என்று நம்புவதாக ஜோ தெரிவித்துள்ளார். மேலும், பிளாஸ்டிக் பொருட்களை மறுசூழற்சி செய்து வெண்டிலேட்டர் தயாரிக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.