​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
மருத்துவமனை மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொண்ட இளைஞருக்கு கொரோனா..?

Published : Mar 27, 2020 3:04 PM

மருத்துவமனை மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொண்ட இளைஞருக்கு கொரோனா..?

Mar 27, 2020 3:04 PM

டெல்லியில் மருத்துவமனை மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்துகொண்ட இளைஞருக்கு கொரோனா தொற்று இல்லை என்பது பரிசோதனையில் தெரிய வந்துள்ளது.

கடந்த 18 ஆம் தேதி ஆஸ்திரேலியாவின் சிட்னி நகரில் இருந்து விமானம் மூலம் டெல்லி வந்த பஞ்சாப்பைச் சேர்ந்த 23 வயது இளைஞருக்கு கொரோனா அறிகுறி இருந்ததால் சஃப்தர்ஜங் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

அவரது ரத்த மாதிரிகள் கொரோனா பரிசோதனைக்கு அனுப்பிவைக்கப்பட்டது. இந்த நிலையில் சிறப்பு வார்ட்டில் தனிமைப்படுத்தப்பட்ட இளைஞர், 7வது மாடியில் இருந்து குதித்துத் தற்கொலை செய்து கொண்டார். தற்போது, ரத்த பரிசோதனை முடிவுகள் வெளியாகியுள்ள நிலையில் அதில் இளைஞருக்கு கொரோனா தொற்று இல்லை என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.