​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
வேளாண் படிப்புகளுக்கு இனி ஆன்லைன் மூலம் கலந்தாய்வு - தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகம் அறிவிப்பு

Published : May 14, 2018 6:48 PM

வேளாண் படிப்புகளுக்கு இனி ஆன்லைன் மூலம் கலந்தாய்வு - தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகம் அறிவிப்பு

May 14, 2018 6:48 PM

வேளாண் படிப்புகளுக்கான கலந்தாய்வு, ஆன்லைன் மூலம் நடத்தப்படும் என்று தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது.

கோவையில் இயங்கும் வேளாண் பல்கலைக்கழகத்தில் 12 இளம் அறிவியல் பாடப்பிரிவுகளும், 4 தொழில்முறை பாடப்பிரிவுகளும் உள்ளன. உறுப்பு கல்லூரிகள் மற்றும் இணைப்பு கல்லூரிகள் சேர்த்து மொத்தம் 6,569 இடங்கள் நிரப்பப்பட இருக்கின்றன.

நடப்பு கல்வியாண்டு முதல் இணையதளம் முறையில் மட்டுமே மாணவர்கள் விண்ணப்பிக்க முடியும் என்று வேளாண் பல்லைக்கழகம் அறிவித்துள்ளது. வரும் 18 ஆம் தேதி முதல் www.tnau.ac.in என்ற இணையதளத்தில் விண்ணப்பங்களை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என்றும், ஜுன் 17 ஆம் தேதி கடைசிநாள் என்றும் குறிப்பிட்டுள்ளது. தரவரிசை பட்டியல் ஜுன் 22 ஆம் தேதி வெளியிடப்பட இருக்கிறது. ஜூலை 9 ஆம் தேதி முதல் 13-ந் தேதி வரை முதற்கட்ட ஆன்லைன் கலந்தாய்வு நடக்கிறது.