சீனாவில் வீட்டில் வைக்கப்பட்டிருந்த ஒயினை குடித்த யானைகள் போதையில் உறங்கிய வீடியோ வைரலாகி வருகிறது.
யுன்னான் மாகாணத்தில் உள்ள வனப்பகுதியில் இருந்த வெளியேறிய சில யானைகள் அங்கிருந்த தேயிலைத் தோட்டத்திற்குள் புகுந்தன. அங்கிருந்த வீட்டைக் கண்ட யானைகள் அதனைத் துவம்சம் செய்தன.
அப்போது வீட்டுக்குள் வைக்கப்பட்டிருந்த 30 லிட்டர் ஒயினையும் இரு யானைகள் ரசித்து ருசித்துக் குடித்தன. பின்னர் அங்கிருந்து வெளியேறிய யானைகள் போதையில் எங்கு செல்வதெனத் தெரியாமல் தேயிலைத் தோட்டத்திலேயே படுத்து உறங்கின.
இந்த வீடியோ இணையத்தில் வேகமாகப் பரவி வருகிறது.