​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
சசிகலாவை இனி சகோதரி என்று அழைக்கமாட்டேன் - திவாகரன்

Published : May 14, 2018 3:43 PM

சசிகலாவை இனி சகோதரி என்று அழைக்கமாட்டேன் - திவாகரன்

May 14, 2018 3:43 PM

சசிகலாவை இனி சகோதரி என அழைக்கப் போவதில்லை என்று திவாகரன் தெரிவித்துள்ளார்.

சசிகலா குடும்பத்தில் தினகரனுக்கும் திவாகரனுக்கும் அண்மையில் கருத்து வேறுபாடு ஏற்பட்டது. இருவரும் மாறி மாறி ஒருவரை ஒருவர் குற்றம்சாட்டிக் கொண்டனர். இதை அடுத்து அம்மா அணி என்ற பெயரில் செயல்பட உள்ளதாக திவாகரன் கூறினார்.

ஆனால் இந்த அணிக்கு தமது பெயரையோ, புகைப்படத்தையோ பயன்படுத்தக் கூடாது என சசிகலா தரப்பில் திவாகரனுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டது. ஊடகங்களில் உடன் பிறந்த சகோதரி சசிகலா என கூறுவதையும் நிறுத்திக் கொள்ள வேண்டும் என்று அந்த நோட்டீசில் கேட்டுக் கொள்ளப்பட்டு இருந்தது. இதுகுறித்து திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியில் செய்தியாளர்களை சந்தித்த திவாகரன், சசிகலா குடும்பத்தை சேர்ந்தவர் என்கிற பெயர் தனக்கு தேவையில்லை என்று கூறினார். சசிகலாவின் சகோதரன் என்று அழைக்கப்படுவதையும் வெறுப்பதாக திவாகரன் தெரிவித்தார். சசிகலாவை முன்னாள் சகோதரி என்றும் திவாகரன் குறிப்பிட்டார்.

சசிகலாவின் சகோதரன் என்பதால் தான் பலமுறை ரெய்டுகளுக்கு ஆளானதாக திவாகரன் குற்றம்சாட்டினார். சசிகலாவின் சகோதரன் என்ற பாறாங்கல்லை தலையில் சுமந்து கொண்டு இருந்ததாகவும் அவர் தெரிவித்தார்.