​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
உள்நாட்டு விமான முனையங்களில் தினமும் 16,000 பேருக்கு பரிசோதனை

Published : Mar 20, 2020 3:13 PM

உள்நாட்டு விமான முனையங்களில் தினமும் 16,000 பேருக்கு பரிசோதனை

Mar 20, 2020 3:13 PM

கொரோனா தடுப்பு நடவடிக்கைகளுக்கு, வெளிநாடுகளில் இருந்து சென்னனை வரும் விமான பயணிகள் ஒத்துழைப்பு தர வேண்டும் என சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் கேட்டுக்கொண்டுள்ளார்.

தாம்பரம் அரசு நெஞ்சக நோய் மருத்துவமனையில் அமைக்கபட்டுள்ள கொரோனா வைரஸ் சிறப்பு சிகிச்சை மையத்தை ஆய்வு செய்த அவர் செய்தியாளர்களை சந்தித்தார்.

உள்நாட்டை பொறுத்தவரை, கேரளா மற்றும் டெல்லியிலிருந்து வரும் விமான பயணிகள் மட்டுமே பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டு வந்தனர்.

தற்போது அனைத்து நகரங்களில் இருந்து, தினமும் வரும் 16 ஆயிரம் விமான பயணிகளையும் சுகாதாரத்துறை ஊழியர்கள் பரிசோதித்து வருவதாக விஜயபாஸ்கர் தெரிவித்தார்.