​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
கருக்கலைப்பு குற்றம் அல்ல எனும் மசோதா நியூசிலாந்து நாடாளுமன்றத்தில் நிறைவேற்றம்

Published : Mar 20, 2020 8:25 AM

கருக்கலைப்பு குற்றம் அல்ல எனும் மசோதா நியூசிலாந்து நாடாளுமன்றத்தில் நிறைவேற்றம்

Mar 20, 2020 8:25 AM

கருக்கலைப்பு குற்றம் அல்ல எனும் மசோதா நியூசிலாந்து நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டுள்ளது.

கருக்கலைப்பு செய்வது நியூசிலாந்தை பொருத்தவரை கடந்த 40 ஆண்டுகளாக குற்றமாக கருதப்பட்டுவந்தது.

இந்நிலையில், அந்த நாட்டின் குற்றவியல் சட்டத்தில் இருந்து, கருக்கலைப்பு குற்றம் என்று கூறப்பட்ட பிரிவை நீக்க முடிவு செய்யப்பட்டு, இதற்கான மசோதா, அந்நாட்டின் நாடாளுமன்றத்தில் கொண்டுவரப்பட்டு நிறைவேறியது.

நியூசிலாந்தில் இனி பெண்கள் 20 வாரங்கள் வரை தங்களது கர்ப்பத்தை கலைத்துக் கொள்ள தடை ஏதும் இல்லை என அறிவிக்கப்பட்டுள்ளது.