​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
கொரோனாவுக்கு ரஷ்யாவில் முதல் உயிரிழப்பு

Published : Mar 20, 2020 8:08 AM

கொரோனாவுக்கு ரஷ்யாவில் முதல் உயிரிழப்பு

Mar 20, 2020 8:08 AM

ரஷ்யாவில் கொரோனாவின் தாக்கத்துக்கு முதன்முதலாக ஒருவர் உயிரிழந்துள்ளார்.

சீனாவில் தொடங்கி சுமார் 178 நாடுகளுக்கு கொரோனா பரவியுள்ள நிலையில் சீன எல்லைகளை பகிரும் ரஷ்யாவில், இதனால் எவ்வித உயிரிழப்பும் இல்லாமல் இருந்துவந்தது.

இந்நிலையில் மாஸ்கோவில் உள்ள மருத்துவமனையில் கொரோனா பாதிப்புக்காக சிகிச்சை பெற்றுவந்த 79 வயது முதியவர் உயிரிழந்தார்.

ரஷ்ய நாட்டில் கொரோனாவால் ஏற்பட்ட முதல் உயிரிழப்பாக இது பதிவாகி உள்ளது. அந்நாட்டில் சுமார் 200 பேருக்கு கொரோனா இருப்பது உறுதிசெய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.