​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
கொரோனா பீதிக்கு இடையே CAA போராட்டம் நடத்திய 2500 பேர் மீது 'தொற்றுநோய்' சட்டப்பிரிவில் வழக்கு

Published : Mar 19, 2020 7:34 PM

கொரோனா பீதிக்கு இடையே CAA போராட்டம் நடத்திய 2500 பேர் மீது 'தொற்றுநோய்' சட்டப்பிரிவில் வழக்கு

Mar 19, 2020 7:34 PM

கொரோனா தாக்கத்திற்கு இடையே குடியுரிமைச் சட்டத்துக்கு எதிராக போராட்டம் நடத்திய 2500 பேர் மீது தொற்றுநோயை பரப்பும்  சட்டப்பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் சார்பில் பாரிமுனை எஸ்பிளனேடு சாலையில் இருந்து குறளகம் வரை ஆயிரக்கணக்கானோர் திரண்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

கொரோனா பரவலை தடுக்கும் நோக்கில்  பொது இடங்களில்  கூட்டம் சேர்க்க வேண்டாம் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ள நிலையில் பல்வேறு அமைப்புகள் போராட்டங்களை கைவிட்டுள்ளன.

இந்நிலையில் பெண்கள், குழந்தைகள், முதியவர்களை திரட்டி போராட்டம் நடத்தியதாக இந்த வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் முதன் முறையாக இந்த சட்டப் பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.