​​ நண்பனின் உயிரை காப்பாற்றி தன் உயிரை மாய்த்துக் கொண்ட கல்லூரி மாணவன் - திண்டுக்கலில் துயர சம்பவம்
Polimer News
Polimer News Tamil.
Advertisement
நண்பனின் உயிரை காப்பாற்றி தன் உயிரை மாய்த்துக் கொண்ட கல்லூரி மாணவன் - திண்டுக்கலில் துயர சம்பவம்

Published : May 13, 2018 9:21 PM

நண்பனின் உயிரை காப்பாற்றி தன் உயிரை மாய்த்துக் கொண்ட கல்லூரி மாணவன் - திண்டுக்கலில் துயர சம்பவம்

May 13, 2018 9:21 PM

திண்டுக்கல்லில் குளத்தில் மூழ்கிய நண்பனை காப்பாற்றச் சென்ற கல்லூரி மாணவர் நீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்தார்.

திண்டுக்கல் சோலைஹால் தெருவைச் சேர்ந்த ரித்திக் சகாயம், தனது நண்பர்களுடன் திண்டுக்கல் மலைக்கோட்டை அடிவாரத்தில் உள்ள கோட்டை குளத்தில் கால் கழுவுதற்காக சென்றுள்ளனர். அப்போது ரித்திக்கின் நண்பரான வின்னரசு கால் தவறி குளத்தில் விழுந்தனர்.

தனது நண்பன் தண்ணீரில் விழுந்து உயிருக்குப் போராடுவதைக் கண்டு அதிர்ச்சியடைந்த ரித்திக், குளத்தில் குதித்து வின்னரசுவை மேலே தள்ளி விட்டுவிட்டு, தண்ணீரில் மூழ்கி உயிரிழந்தார். மேலே இருந்த மற்றவர்கள் கூச்சலிட்டதையடுத்து, அருகிலிருந்தோர் ரித்திக் சகாயத்தின் உடலை மீட்டு கரைக்கு கொண்டு வந்தனர்.