​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
17 காங்கிரஸ் MLA-க்கள் திடீர் மாயம்..! ம.பி.யில் ஆட்சி கவிழ்கிறது..?

Published : Mar 09, 2020 7:48 PM

17 காங்கிரஸ் MLA-க்கள் திடீர் மாயம்..! ம.பி.யில் ஆட்சி கவிழ்கிறது..?

Mar 09, 2020 7:48 PM

மத்திய பிரதேசத்தில் அதிருப்தியில் இருக்கும் காங்கிரஸ் தலைவர் ஜோதிர்ஆதித்ய சிந்தியா தலைமையில் அவரது  ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் 17 பேர் திடீரென மாயமானதால், ஆளும் காங்கிரஸ் அரசு அதிர்ச்சி அடைந்துள்ளது.

230 பேர் உள்ள மத்திய பிரதேச சட்டமன்றத்தில் காங்கிரசுக்கு ஆதரவாக 117  எம்.எல்.ஏ.க்களும், பாஜகவுக்கு 107பேரும் உள்ளனர்.

இந்த நிலையில் மாநில காங்கிரஸ் தலைவராகும் ஜோதிர்ஆதித்ய சிந்தியாவின் முயற்சிக்கு முதலமைச்சர் கமல் நாத் முட்டுக்கட்டை போடுவதால் அங்கு உள்கட்சிப் பூசல் கொடிகட்டிப் பறக்கிறது.

26 ஆம் தேதி நடக்கவுள்ள மாநிலங்களவை எம்.பி.தேர்தலில் காங்கிரஸ், பாஜக ஆகியன தலா ஒரு இடத்தில் வெற்றி பெறும் நிலையில் உள்ளன. அதே சமயம் 3 ஆவது எம்.பி.யை தேர்ந்தெடுப்பதில் இழுபறி நடக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த நிலையில்  17எம்.எல்.ஏ.க்கள் காணாமல் போனதால் அதிர்ச்சி அடைந்த  முதலமைச்சர் கமல் நாத் டெல்லியில் இருந்து அவசரம் அவசரமாக போபால் வந்தடைந்தார்.