​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
அரசு மருத்துவர்கள் போராட்டம் நடத்த உரிமை இல்லை...

Published : Feb 28, 2020 11:25 AM



அரசு மருத்துவர்கள் போராட்டம் நடத்த உரிமை இல்லை...

Feb 28, 2020 11:25 AM

அரசு மருத்துவர்கள் போராட்டத்தில் ஈடுபட உரிமை இல்லை என்று சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

ஊதிய உயர்வு உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்திக் கடந்த ஆண்டு வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்ட மருத்துவர்களுக்குக் குற்றச்சாட்டு குறிப்பாணையும், சிலருக்குப் பணியிட மாற்ற உத்தரவுகளும் பிறப்பிக்கப்பட்டன.

இதை எதிர்த்து மருத்துவர் பாலசுப்ரமணியம் உள்ளிட்டோர் தொடுத்த வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம், ஒழுங்கு நடவடிக்கைக்கு இடைக்காலத் தடை விதித்தது.

இந்த வழக்கில் இன்று தீர்ப்பளித்த நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ், அரசு மருத்துவர்கள் போராட்டத்தில் ஈடுபட உரிமையில்லை எனத் தெரிவித்தார்.

போராட்டத்தில் ஈடுபட்டதற்காகக் குற்றச்சாட்டுக் குறிப்பாணை வழங்கியும், பணியிட மாற்றம் செய்தும் அரசு பிறப்பித்த உத்தரவுகளை ரத்து செய்தார். மருத்துவர்களின் கோரிக்கையை அரசு பரிசீலிக்க வேண்டும் எனவும் நீதிபதி அறிவுறுத்தினார்.