​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
சரிவில் தங்கம் விலை

Published : Feb 27, 2020 4:28 PM

சரிவில் தங்கம் விலை

Feb 27, 2020 4:28 PM

சென்னையில் தங்கம் விலை இன்று சவரனுக்கு128 ரூபாய் குறைந்துள்ளது.

தொடர்ந்து அதிகரித்து வந்த தங்கம் விலை அண்மையில் 33 ஆயிரம் ரூபாயை கடந்து புதிய உச்சத்தை எட்டியது. அதன் பின்னர் கடந்த இரு தினங்களாக படிப்படியாக குறைந்து வந்த தங்கம் விலை, தொடர்ந்து 3வது நாளாக இன்றும் குறைந்துள்ளது.

அதன்படி நேற்று 4,080 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்ட ஒரு கிராம் ஆபரணத்தங்கம் இன்று 16 ரூபாய் குறைந்து 4,064 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. நேற்று 32 ஆயிரத்து 640 ரூபாய்க்கு விற்பனையான ஒரு சவரன் ஆபரணத்தங்கம், இன்று 128 ரூபாய் குறைந்து 32 ஆயிரத்து 512 ரூபாய்க்கு விற்பனையாகிறது.

அதே போல் வெள்ளி விலையும் சற்றே குறைந்துள்ளது. நேற்று 51 ஆயிரத்து 400 ரூபாய்க்கு விற்பனையான ஒரு கிலோ பார்வெள்ளி, இன்று 500 ரூபாய் குறைந்து 50 ஆயிரத்து 900 ரூபாய்க்கு விற்பனையாகிறது.