​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
உடல்நலக்குறைவால் காலமான கே.பி.பி சாமியின் உடலுக்கு மு.க.ஸ்டாலின் அஞ்சலி

Published : Feb 27, 2020 12:39 PM

உடல்நலக்குறைவால் காலமான கே.பி.பி சாமியின் உடலுக்கு மு.க.ஸ்டாலின் அஞ்சலி

Feb 27, 2020 12:39 PM

உடல்நலக்குறைவால் காலமான முன்னாள் அமைச்சரும், திவொற்றியூர் எம்.எல்.ஏவுமான கே.பி.பி.சாமியின் உடலுக்கு திமுக தலைவர் ஸ்டாலின் நேரில் அஞ்சலி செலுத்தினார்.

திமுக மீனவரணி மாநில செயலாளராக பொறுப்பு வகித்து வந்த கே.பி.பி. சாமி, 2006-2011 வரையிலான திமுக ஆட்சியில் மீன்வளத்துறை அமைச்சராகப் பதவி வகித்தார். பின்னர் 2016ல் திருவொற்றியூர் சட்டமன்ற உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

57 வயதான அவர் உடல்நலக்குறைவால் அவதியுற்று வந்த நிலையில் காலமானார். அவரது இல்லத்தில் வைக்கப்பட்டிருந்த உடலுக்கு ஸ்டாலின் அஞ்சலி செலுத்தினார்.