​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
மத்திய அரசு திட்டமிட்டபடி பொதுத்துறை வங்கிகள் இணைப்பு நடைபெறும் - நிர்மலா சீதாராமன்

Published : Feb 27, 2020 9:57 AM

மத்திய அரசு திட்டமிட்டபடி பொதுத்துறை வங்கிகள் இணைப்பு நடைபெறும் - நிர்மலா சீதாராமன்

Feb 27, 2020 9:57 AM

மத்திய அரசு திட்டமிட்டபடி பொதுத்துறை வங்கிகள் இணைப்பு நடைபெறும் என்று மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார். 

டெல்லியில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்துக் கொண்டு பேசிய நிர்மலா சீதாராமன், வங்கிகள் இணைப்பு நிச்சயம் மேற்கொள்ளப்படும் என்று தெரிவித்தார். 10 பொதுத்துறை வங்கிகளை நான்கு வங்கிகளாக இணைப்பதற்கான நடவடிக்கையை கடந்த ஆண்டு மத்திய அரசு மேற்கொண்டது. அதன்படி யுனைடெட் பேங்க் ஆப் இந்தியா, ஒரியண்டல் பேங்க் ஆப் கமர்ஸ் ஆகியவை

பஞ்சாப் நேஷனல் வங்கியுடன் இணைக்கப்பட்டன. விஜயா வங்கி தேனா வங்கி ஆகியவை பேங்க் ஆப் பரோடாவுடன் இணைக்கப்பட்டன.
இதே போன்று சிண்டிகேட் வங்கியை கனரா வங்கியுடனும் அலாகாபாத் வங்கியை இந்தியன் வங்கியுடன் இணைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. கொரோனா வைரஸ் பொருளாதாரத்தில் ஏற்படுத்தும் பாதிப்புகள் உன்னிப்பாக கண்காணிக்கப்பட்டு வருவதாகவும் நிர்மலா சீதாராமன் தெரிவித்தார். 

இரண்டாயிரம் ரூபாய் நோட்டுகளை வங்கி ஏடிஎம்களில் பயன்படுத்தக்கூடாது என்று எந்த உத்தரவும் பிறப்பிக்கப்படவில்லை என்று மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.

அண்மையில் இந்தியன் வங்கி தனது ஏடிஎம் களில் 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகளைப் பயன்படுத்துவதை நிறுத்துவதாக அறிவித்தது. இதனைத் தொடர்ந்து பல்வேறு பொதுத்துறை வங்கிகளும் இரண்டாயிரம் ரூபாய் நோட்டுகளை விநியோகிப்பதைக் குறைத்துக் கொண்டு அதிக அளவில் 500 ரூபாய் நோட்டுகளை விநியோகம் செய்யத் தொடங்கியுள்ளன.ஆனால் வங்கிகள் 2 ஆயிரம் ரூபாய் புழக்கத்தை நிறுத்துமாறு எந்த ஒரு உத்தரவும் பிறப்பிக்கப்படவில்லை என்று நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.