​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
கேரளாவை உலுக்கிய சீரியல் கில்லர் ஜோலி தற்கொலை முயற்சி

Published : Feb 27, 2020 9:49 AM



கேரளாவை உலுக்கிய சீரியல் கில்லர் ஜோலி தற்கொலை முயற்சி

Feb 27, 2020 9:49 AM

கேரளாவில் 6 பேரை சொத்துக்காக கொலை செய்த வழக்கில் கைதான ஜோலி, மணிக்கட்டை வெட்டிக் கொண்டு சிறையில் தற்கொலைக்கு முயன்றார்.

கேரள மாநிலம் கூடத்தாயி பகுதியைச் சேர்ந்த இவர் 14 ஆண்டுகளில் குழந்தை உட்பட 6 பேரை சயனைடு கொடுத்துக் கொன்றது தெரிய வந்ததை அடுத்து கடந்த அக்டோபர் மாதம் அவரை போலீசார் கைது செய்தனர்.

கோழிக்கோடு சிறையில் அடைக்கப்பட்டிருந்த ஜோலி இன்று அதிகாலை கூர்மையான ஆயுதத்தால் மணிக்கட்டை அறுத்துள்ளார். தகவல் அறிந்த சிறை அதிகாரிகள் உடனடியாக அவரை கோழிக்கோடு மருத்துவமனையில் அனுமதித்தனர். ஜோலி தற்கொலைக்கு முயன்றது எப்படி என போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.