​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
தி.மு.க. எம்.எல்.ஏ. கே.பி.பி. சாமி காலமானார்

Published : Feb 27, 2020 7:40 AM

தி.மு.க. எம்.எல்.ஏ. கே.பி.பி. சாமி காலமானார்

Feb 27, 2020 7:40 AM

திமுக முன்னாள் அமைச்சரும் திருவொற்றியூர் சட்டமன்ற உறுப்பினருமான கே.பி.பி. சாமி உடல்நலக் குறைவால் காலமானார்.

அவருக்கு வயது 57. திமுக மீனவரணி மாநில செயலாளராக பொறுப்பு வகித்து வந்த கே.பி.பி. சாமி, கடந்த 2006 முதல் 2011ஆம் ஆண்டு வரையிலான திமுக ஆட்சியில் மீன்வளத்துறை அமைச்சராகப் பதவி வகித்துள்ளார்.

2016ஆம் ஆண்டு திருவொற்றியூர் சட்டமன்ற உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்ட கே.பி.பி.சாமி, கடந்த சில நாட்களாகவே உடல்நலக்குறைவால் அவதியுற்று வந்தார். இந்த நிலையில், கே.வி. குப்பம் பகுதியிலுள்ள அவரது இல்லத்தில் காலமானார்.