​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
6 கண்டங்களையும் வளைத்த கொரோனா வைரஸ்

Published : Feb 27, 2020 6:20 AM

6 கண்டங்களையும் வளைத்த கொரோனா வைரஸ்

Feb 27, 2020 6:20 AM

உலகையே அச்சுறுத்தி வரும் கொரோனா வைரசின் தாக்கம் அண்டார்க்டிகாவைத் தவிர பூமியின் 6 கண்டங்களிலும் பரவியுள்ளது.

சீனாவில் படிப்படியாக கொரோனாவின் தாக்கம் குறைந்து வரும் நிலையில் ஏனைய நாடுகளில் அதன் பாதிப்பு அதிகரித்து வருகிறது.

சீன அரசு மேற்கொண்ட நடவடிக்கைகள் காரணமாக, கொரோனா வைரசின் பாதிப்பு படிப்படியாக கட்டுக்குள் வரும் நிலையில், அமெரிக்க, ஐரோப்பிய நாடுகளில் இதன் தாக்கம் அதிகரித்து காணப்படுகிறது. சீனாவின் அண்டை நாடான தென்கொரியாவில் ஆயிரத்து 261க்கும் அதிகமானார் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் அங்கு உயிரிழந்தோர் எண்ணிக்கை 12 ஆக உயர்ந்துள்ளது. மேலும் தென் கொரிய ராணுவத்தைச் சேர்ந்த 20 வீரர்களுக்கும் கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. 

 ஈரான் நாட்டில் வைரசால் தாக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை139 ஆக உள்ள நிலையில் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 19 ஆக அதிகரித்துள்ளது. இத்தாலியில் 400க்கும் மேற்பட்டவர்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் அந்நாடு அதற்கான தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது.

ஆசியா, ஐரோப்பா, ஆஸ்திரேலியா, வட அமெரிக்க கண்டங்களில் மட்டுமே பரவியிருந்த கொரோனா வைரஸ் தென் அமெரிக்காவில் பிரேசிலிலும், ஆப்பிரிக்காவில் அல்ஜீரியா மற்றும் எகிப்து உள்ளிட்ட நாடுகளிலும் பரவியதைத் தொடர்ந்து அண்டார்க்டிக்கா அல்லாத 6 கண்டங்களிலும் பரவிய நோயாக பார்க்கப்படுகிறது.