​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
சிஏஏ போராட்ட வன்முறை.. நடிகர் ரஜினிகாந்த் ஆவேசம்..!

Published : Feb 26, 2020 7:16 PM



சிஏஏ போராட்ட வன்முறை.. நடிகர் ரஜினிகாந்த் ஆவேசம்..!

Feb 26, 2020 7:16 PM

வடகிழக்கு டெல்லியில் தலைதூக்கியுள்ள வன்முறையை, மத்திய அரசு இரும்புக்கரம் கொண்டு ஒடுக்க வேண்டும் என நடிகர் ரஜினிகாந்த் வலியுறுத்தியிருக்கிறார். குடியுரிமை திருத்தச் சட்டத்தை எதிர்த்து நடத்தும் போராட்டங்களால், எந்த பிரயோஜனமும் இல்லை என்றும் ரஜினிகாந்த் கூறியிருக்கிறார். 

ஹைதராபாத்தில் "அண்ணாத்த" படபிடிப்பில் பங்கேற்ற ரஜினிகாந்த், இரவு 7 மணியளவில், சென்னை திரும்பினார்..

போயஸ் கார்டனில் உள்ள தனது வீட்டிற்கு வெளியே செய்தியாளர்களை சந்தித்த, நடிகர் ரஜினிகாந்த், டெல்லி வன்முறை, உளவுத்துறையின் தோல்வியை காட்டுவதாகவும், அதற்கு, தனது கண்டனங்களை தெரிவித்துக் கொள்வதாகவும், கூறினார். வன்முறைச் சம்பவங்களை, மத்திய அரசு இரும்புக்கரம் கொண்டு ஒடுக்க வேண்டும் என்றார்.

சிலர் தன்னை பாரதிய ஜனதா கட்சியின் ஆதரவாளர் என கூறுவது வேதனை அளிப்பதாக தெரிவித்த ரஜினிகாந்த், அக்கட்சிக்கும் தமக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்றார்.

போராட்டம் நடத்த உரிமை இருந்தாலும், அதில் வன்முறை கூடாது என்பதே தனது நிலைப்பாடு என்றார். டெல்லியில், வன்முறையை ஒடுக்காவிட்டால், சம்பந்தப்பட்டோர் ராஜினாமா செய்துவிட்டு போகட்டும் என, ரஜினிகாந்த் தெரிவித்தார்.