​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
உலக பணக்கார நாடுகளின் பட்டியலில் இந்தியாவுக்கு 6வது இடம்

Published : Feb 26, 2020 6:45 PM

உலக பணக்கார நாடுகளின் பட்டியலில் இந்தியாவுக்கு 6வது இடம்

Feb 26, 2020 6:45 PM

உலகளவில் 10 பணக்கார நாடுகளின் பட்டியலில் இந்தியா ஆறாவது இடத்தில் உள்ளது.

கிரிடிட் சூசெஸ் (Credit Suisse’s) எனும் முன்னணி நிதி சேவை நிறுவனம் உலகின் 10 பணக்கார நாடுகளின் பட்டியலை வெளியிட்டுள்ளது.

360 ட்ரில்லியன் டாலரில் 30 சதவீதம் செல்வம் கொண்ட அமெரிக்கா முதலிடத்திலும்,

63 புள்ளி8 ட்ரில்லியன் டாலர் கொண்ட சீனா 2வது இடத்திலும்,

25 ட்ரில்லியன் டாலர் கொண்ட ஜப்பான் 3வது இடத்திலும் உள்ளன.

அதற்கு அடுத்தப்படியாக 14 புள்ளி 7ட்ரில்லியன் டாலர் கொண்ட ஜெர்மனி 4வது இடத்திலும்,

14 புள்ளி 3 ட்ரில்லியன் டாலர் கொண்ட இங்கிலாந்து 5வது இடத்திலும்,

12 புள்ளி 6 ட்ரில்லியன் டாலர் கொண்ட இந்தியா 6வது இடத்திலும் உள்ளன.

கனடா, தென் கொரியா, ஆஸ்திரேலியா, சுவிட்சர்லாந்து நாடுகள் அடுத்தடுத்த இடத்தை பிடித்தன.