​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
ஆற்றில் பேருந்து கவிழ்ந்து 25 பேர் பலி..!

Published : Feb 26, 2020 4:37 PM



ஆற்றில் பேருந்து கவிழ்ந்து 25 பேர் பலி..!

Feb 26, 2020 4:37 PM

ராஜஸ்தானில், ஆற்றில் பேருந்து எதிர்பாராதவிதமாக கவிழ்ந்த விபத்தில் 3 குழந்தைகள், 10 பெண்கள் உள்பட 25 பேர் உயிரிழந்துள்ளனர்.

திருமண நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொள்வதற்காக ஒரு குடும்பத்தினர் தங்கள் உறவினர்கள் மற்றும் நண்பர்களுடன் SAWAI MADHOPUR என்ற இடத்தில் இருந்து KOTA என்ற பகுதிக்கு பேருந்தில் சென்று கொண்டிருந்த போது, PAPDI என்ற கிராமத்தில் இந்த விபத்து நிகழ்ந்தது.

ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த பேருந்து ஆற்றுக்குள் கவிழ்ந்ததாக முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது. இந்த விபத்தின் போது, உயிருடன் மீட்கப்பட்ட சிலர், உள்ளூர் மருத்துவமனையில் ஆபத்தான நிலையில் அனுமதிக்கப்பட்டு உள்ளதால், உயிரிழப்பு மேலும் அதிகரிக்கக்கூடும் என அஞ்சப்படுகிறது.

காஷ்மீரில், கார் மீது அதிவேகத்தில் மோதிய லாரி கவிழ்ந்து விபத்து

ஜம்மு-காஷ்மீரில், வெங்காயம் ஏற்றி வந்த லாரி, கார் மீது அதிவேகத்தில் மோதி, அதனை இழுத்துச் சென்று கவிழ்ந்து விபத்துக்குள்ளான சம்பவத்தின் சிசிடிவி காட்சிப்பதிவு வெளியாகியுள்ளது.

காஷ்மீரின் சம்பா பகுதியில், ஜம்மு-பதான்கோட் (Jammu-Pathankot) தேசிய நெடுஞ்சாலை அமைந்துள்ளது. இங்கு, கார் ஒன்று, தனக்குரிய வழித்தடத்தில் சென்று கொண்டிருந்தது. அதன் எதிர்திசையில், வெங்காயம் ஏற்றி வந்த லாரி, அதிவேகத்தில், கட்டுப்பாட்டை இழந்து கார் மீது மோதியதோடு, அதை பல அடி தூரத்திற்கு இழுத்துச் சென்றது.

அப்போது, காருக்கு பின்னால் வந்து கொண்டிருந்த இருசக்கர வாகன ஓட்டியும் தப்பவில்லை. இந்த சம்பவத்தில், நல்வாய்ப்பாக, படுகாயம், உயிரிழப்பு எதுவுமின்றி, அனைவரும் லேசான காயங்களுடன் உயிர் தப்பினர்.