​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
இந்தியப் பங்குச்சந்தை நிலவரம்

Published : Feb 26, 2020 4:15 PM



இந்தியப் பங்குச்சந்தை நிலவரம்

Feb 26, 2020 4:15 PM

இந்தியப் பங்குச்சந்தைகளில் இன்றைய வணிக நேர முடிவில் வணிகம் வீழ்ச்சியுடன் நிறைவடைந்துள்ளது.

வணிகநேர முடிவில் மும்பை பங்குச்சந்தை பங்குவிலைக் குறியீடு சென்செக்ஸ் 392 புள்ளிகள் சரிந்து 39 ஆயிரத்து 889 ஆக இருந்தது. தேசியப் பங்குச்சந்தை நிப்டி 119 புள்ளிகள் சரிந்து 11 ஆயிரத்து 678 ஆக இருந்தது.

கொரோனா வைரஸ் பாதிப்பின் எதிரொலியாக வணிகம், தொழில்துறைகளில் ஏற்பட்டுள்ள தாக்கமே பங்குச்சந்தை வீழ்ச்சிக்குக் காரணம் என வணிகர்கள் தெரிவித்துள்ளனர்.