​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
உலக நாடுகளில் வேகமாக பரவும் கொரோனா வைரஸ் - மக்கள் பீதி

Published : Feb 26, 2020 10:44 AM

உலக நாடுகளில் வேகமாக பரவும் கொரோனா வைரஸ் - மக்கள் பீதி

Feb 26, 2020 10:44 AM

தென் கொரியாவில் மேலும் 169 பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு உள்ளது கண்டறியப்பட்டுள்ளது.

கொரோனாவால் அதிகம் பாதிக்கப்பட்ட நாடுகளில் சீனாவுக்கு அடுத்த இடத்தில் தென் கொரியாவே உள்ளது. இந்நிலையில் புதிய ஆய்வின்படி, அங்கு ஒட்டு மொத்தமாக அமெரிக்க ராணுவ வீரர் உள்பட1146 பேருக்கு கொரோனா பாதிப்பு உள்ளது கண்டறியப்பட்டுள்ளது.

புதிதாக கொரோனா தொற்று கண்டுபிடிக்கப்பட்ட 169 பேரில் 134 பேர் தேகு (Daegu) எனும் பகுதியைச் சேர்ந்தவர்கள் ஆவர். அங்குள்ள சின்சியோஞ்சி எனும் தேவாலயத்தில் இருந்தே அதிகமானோருக்கு கொரோனா பரவியதாகவும் கூறப்படும் நிலையில், தேவாலயத்துடன் தொடர்புடைய சுமார் இரண்டு லட்ச பேரை பரிசோதனை செய்ய முடிவெடுத்துள்ளதாகவும் கூறப்படுகிறது.

இத்தாலி

இத்தாலியில் கொரானா வைரசால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை ஒரே இரவில 283 ஆக அதிகரித்துள்ளது. 7 பேர் உயிரிழந்துள்ள நிலையில், அவர்கள் முதுமையாலோ அல்லது வேறு வியாதிகளாலோ உயிரிழந்திருப்பார்கள் என அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது. இருப்பினும் 2 பிராந்தியங்களில் பள்ளிகள், அருங்காட்சியகங்கள், திரையரங்கங்கள் மூடப்பட்டுள்ளன.

இத்தாலியின் லோம்பர்டி பிராந்தியத்தில் 10 நகரங்கள் தனிமைபடுத்தப்பட்டுள்ளன. சிசிலி தீவில் ஒரு பெண், குரோஷியாவில் ஒரு ஆண், ஆஸ்திரியாவில் தம்பதியர் இருவர் கொரானாவால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், அவர்கள் அனைவரும் லோம்பர்டியிலிருந்து வந்தவர்களென தெரிய வந்துள்ளது.

அதே போல் லோம்பர்டியின் எல்லையை ஒட்டியுள்ள ஸ்விட்சர்லாந்திலும் 70 வயது முதியவர் கொரானாவால் பாதிக்கப்பட்டுள்ளார். ஸ்பெயினின் கேனேரி தீவில் மருத்துவர் ஒருவருக்கு கொரானா பாதிப்பு உறுதி செய்யப்பட்டதை அடுத்து, அவர் தங்கியிருந்த நட்சத்திர ஹோட்டல் தனிமைபடுத்தப்பட்டு, அதிலுள்ள 1000 பயணிகள் வெளியேற தடை விதிக்கப்பட்டுள்ளது.

சீனா

சீனாவிற்கு அடுத்தபடியாக, கொரானா வைரஸ் வேகமாக பரவி வரும் தென்கொரியாவில், அந்நோய் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை ஆயிரத்து 261ஆக உயர்ந்துள்ளது.

ஒரே நாளில், 169 பேர் கொரானா தாக்குதலுக்கு ஆளாகியுள்ளனர்.  தென்கொரியாவில் உள்ள பியோங்டைய்க் (Pyeongtaek) படைத்தளத்தில், 23 வயதான அமெரிக்க வீரர் கொரானா வைரசால் பாதிக்கப்பட்டுள்ளார்.

இதனைத் தொடர்ந்து, தலைநகர் சியோல் உட்பட, தென்கொரியாவில் கொரானா தடுப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. இதனிடையே, சீனாவிலிருந்து யாரும் வர வேண்டாம் என ஏற்கனவே கூறியிருக்கும் பிலிப்பைன்ஸ் அரசு, தற்போது, தென்கொரியாவிலிருந்து, பயணிகள் யாரும் தங்கள் நாட்டிற்கு வரக் கூடாது என தடை விதித்திருக்கிறது.