​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
ஜிசாட்-1 என்ற புவி கண்காணிப்பு செயற்கைக்கோளை மார்ச் 5ந் தேதி விண்ணில் செலுத்த இஸ்ரோ திட்டம்

Published : Feb 26, 2020 8:47 AM



ஜிசாட்-1 என்ற புவி கண்காணிப்பு செயற்கைக்கோளை மார்ச் 5ந் தேதி விண்ணில் செலுத்த இஸ்ரோ திட்டம்

Feb 26, 2020 8:47 AM

அதிநவீன புவி கண்காணிப்பு ஜியோ இமேஜிங்-1 (GISAT-1) செயற்கைக்கோள் அடுத்த மாதம் 5ம் தேதி மாலை விண்ணில் செலுத்தப்படும் என்று இஸ்ரோ அறிவித்துள்ளது. 

இந்திய விண்வெளி ஆராய்ச்சி அமைப்பான இஸ்ரோ, புவி ஆராய்ச்சி, வானிலை, தகவல் தொடர்பு உள்ளிட்டவற்றுக்காக பல்வேறு செயற்கைக்கோள்களை செலுத்தி வருகிறது. அந்த வரிசையில், அதிநவீன புவி கண்காணிப்பு செயற்கைக்கோளான ஜியோ இமேஜிங் செயற்கைக்கோளை அடுத்த மாதம் 5ம் தேதி மாலை விண்ணில் செலுத்த இஸ்ரோ திட்டமிட்டுள்ளது.

இதுகுறித்து ட்விட்டரில் இஸ்ரோ வெளியிட்டுள்ள பதிவுகளில், ஸ்ரீஹரிகோட்டாவிலுள்ள சதீஷ் தவான் விண்வெளி மைய 2ஆவது ஏவுதளத்தில் இருந்து, ஜிஎஸ்எல்வி எப்.10 (GSLV-F10) ராக்கெட் மூலம் ஜியோ இமேஜிங் செயற்கைக்கோள் ஏவப்படும் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. அடுத்த மாதம் 5ம் தேதி மாலை 5.43 மணிக்கு செயற்கைக்கோளை ஏவ திட்டமிடப்பட்டு உள்ளதாகவும், வானிலை நிலவரத்தை அடிப்படையாக கொண்டு இந்நேரம் சிறிது மாறுபடக்கூடும் என்றும் அந்த பதிவில் இஸ்ரோ தெரிவித்துள்ளது.

GSLV-F10 is scheduled to launch Geo Imaging Satellite, GISAT-1 on March 05, 2020 from Satish Dhawan Space Centre SHAR, Sriharikota.

Details avail at https:/t.co/59AVCpSacl

Watch this space for more updates pic.twitter.com/AqTnirvPWC

— ISRO (@isro) February 25, 2020 ">

சுமார் 2 ஆயிரத்து 275 கிலோ எடை கொண்ட அந்த செயற்கைக்கோளை, புவிசார் ஒத்திசைவு திசை பகுதிக்கு (Geosynchronous Transfer Orbit) ஜிஎஸ்எல்வி -எப் 10 ராக்கெட் முதலில் கொண்டு செல்லும் என்றும், அதன்பிறகு செயற்கைக்கோளில் இருக்கும் உள் உந்துவிசை அமைப்பின் (onboard propulsion system) உதவியுடன் இறுதி புவிவட்ட பாதையில் நிலை நிறுத்தப்படும் என்றும் இஸ்ரோ குறிப்பிட்டுள்ளது. செயற்கைக்கோள் ஏவுவதற்கு 14ஆவது முறையாக ஜிஎஸ்எல்வி ராக்கெட் பயன்படுத்தப்படுகிறது என்றும் இஸ்ரோ தெரிவித்துள்ளது.