​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
ஆன்லைன் டெலிவரி பொருட்களை குறி வைத்து திருடும் பெண்.. சில நிமிடங்களிலேயே கைது செய்த போலீசார்

Published : Feb 25, 2020 6:10 PM

ஆன்லைன் டெலிவரி பொருட்களை குறி வைத்து திருடும் பெண்.. சில நிமிடங்களிலேயே கைது செய்த போலீசார்

Feb 25, 2020 6:10 PM

கனடாவில் ஆன்லைனில் புக் செய்து டெலிவரி செய்யப்பட்ட பார்செலை, திருடிய பெண்ணை சில நிமிடங்களிலேயே போலீசார் கைது செய்துள்ளனர்.

இதுதொடர்பான வீடியோவில், எட்மாண்டன் பகுதியில் கதவு மூடப்பட்டுள்ள ஒரு வீட்டின் முன்பகுதிக்கு வரும் பெண், தன்னை யாரேனும் கவனிக்கின்றனரா என நோட்டம் செய்து விட்டு அங்கிருந்த பார்சலை எடுத்துச் சென்றுள்ளார்.

ஆனால், அவர் சற்றும் எதிர்பாராத விதமாக 3 கார்களில் வந்த போலீசார், அதிரடியாக அந்த பெண்ணை சுற்றி வளைத்து பிடித்துள்ளனர். தொடர்ந்து அப்பகுதியில் நடந்து வந்த கொள்ளை சம்பவங்களை தடுக்க, போலீசார் மேற்கொண்ட ரகசிய நடவடிக்கையில் அந்த பெண் சிக்கியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.