​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
வாடகைத்தாய் மூலம் பிறந்த சிறுத்தை குட்டிகள்..!

Published : Feb 25, 2020 5:40 PM

வாடகைத்தாய் மூலம் பிறந்த சிறுத்தை குட்டிகள்..!

Feb 25, 2020 5:40 PM

அமெரிக்காவில் வாடகை தாய் மூலம் இரண்டு  சிறுத்தை குட்டிகள் பிறந்துள்ளன.

குழந்தை பாக்கியம் இல்லாமல் இருக்கும் எத்தனையோ தம்பதிகள் சோதனைகுழாய் மூலமும்,வாடகை தாய் மூலமும் குழந்தை கிடைக்க இன்றைய அறிவியல் தொழில்நுட்பம் அவர்களுக்கு மிகப்பெரும் உதவியாக இருந்துள்ளது.

image

அந்தவகையில் அமெரிக்காவில் வாடகை தாய் மூலம் இரண்டு  சிறுத்தை குட்டிகள் பிறந்துள்ளன. அமெரிக்காவின் ஒஹோயோ மாகாணத்தில் உள்ள கொலம்பஸ் உயிரியல் பூங்காவில் கிபிபி எனும் சிறுத்தை நீண்டகாலமாக தாய்மை அடையாமல் இருந்துள்ளது.

இதையடுத்து கொலம்பஸ் உயிரியல் பூங்கா நிர்வாகிகளும், ஸ்மித்சோனியன் உயிரியல் ஆராய்ச்சி நிறுவனத்தின் ஆராய்ச்சியாளர்களும் இணைந்து கிபிபி சிறுத்தையின் சினை முட்டைகளை எடுத்து இஸ்ஸி எனும் இன்னொரு சிறுத்தைக்கு கடந்த நவம்பர் மாதம் செலுத்தினர். இதனால் இஸ்ஸி இரண்டு சிறுத்தை குட்டிகளை ஈன்றுள்ளது.

image

உலகிலேயே வாடைகைத்தாய் மூலம் சிறுத்தை கருத்தரித்தது இதுவே முதல்முறை. மூன்று முறை இந்த சோதனைய செய்த நிலையில் இரண்டு முறை தோல்வி அடைந்துள்ளது. மூன்றாவது முறையாக சோதனை வெற்றி பெற்றுள்ளது.

கடந்த 50 ஆண்டுகளில் சிறுத்தைகளின் எண்ணிக்கை கனிசமாக குறைந்து வரும் சூழலில் இந்த சோதனை மூலம் அதற்கு தீர்வு காணலாம் என விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். சிறுத்தைகளின் சராசரி கருத்தரிக்கும் காலம் 90 முதல் 100 நாட்கள் என்பது குறிப்பிடதக்கது.