​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
எடப்பாடி அரசு மருத்துவமனையில் திடீர் ஆய்வு செய்த முதலமைச்சர்

Published : Feb 25, 2020 4:28 PM

எடப்பாடி அரசு மருத்துவமனையில் திடீர் ஆய்வு செய்த முதலமைச்சர்

Feb 25, 2020 4:28 PM

சேலம் மாவட்டம் எடப்பாடி அரசு மருத்துவமனையில் திடீர் ஆய்வு மேற்கொண்ட முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, நோயாளிகளிடம் குறைகளை கேட்டறிந்தார்.

எடப்பாடி பயணியர் மாளிகையில் பொதுமக்களிடம் கோரிக்கை மனுக்களை பெற்ற முதலமைச்சர், தொடர்ந்து எடப்பாடி அரசு மருத்துவமனைக்கு சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கருடன் நேரில் சென்று திடீர் ஆய்வு மேற்கொண்டார்.

ஸ்கேன் மையத்தில் தொடங்கி ஒவ்வொரு பிரிவாக சென்று ஆய்வு செய்த முதலமைச்சர், நோயாளிகளிடம் குறைகளை கேட்டறிந்தார். மேலும் மகப்பேறு பிரிவிலிருந்த குழந்தையின் தாய்க்கு அம்மா குழந்தைகள் நல பரிசு பெட்டகத்தையும் வழங்கினார். தொடர்ந்து மருத்துவர்கள், செவிலியர்களிடம் குறைகளை கேட்டறிந்த முதலமைச்சர், நோயாளிகளிடம் கனிவுடன் நடந்து கொள்ள வேண்டும் என அறிவுரை வழங்கினார்.