​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
காதலி தற்கொலை.. காதலன் கொலை.. புதுச்சேரி பயங்கரம்..!

Published : Feb 25, 2020 4:26 PM

காதலி தற்கொலை.. காதலன் கொலை.. புதுச்சேரி பயங்கரம்..!

Feb 25, 2020 4:26 PM

புதுச்சேரியில் காதல் தோல்வியால் தற்கொலை செய்துகொண்ட பெண்ணின் இறப்புக்கு வந்த அவரது காதலனை பெண்ணின் உறவினர்கள் கடத்திச் சென்று கொடூரமாக கொலை செய்த சம்பவம் அரங்கேறியுள்ளது. 

புதுச்சேரி அடுத்த பெரியகோட்டக்குப்பத்தைச் சேர்ந்த ராகவன், ஹைதராபாத்திலுள்ள டைல்ஸ் ஒட்டும் வேலை செய்து வந்தார். அவரும் சாமிப்பிள்ளை தோட்டத்தைச் சேர்ந்த செவிலியரான அருணாவும் கடந்த சில ஆண்டுகளாக காதலித்து வந்துள்ளனர்,. இந்தக் காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்த அருணாவின் பெற்றோர் அவருக்கு வேறு ஒருவரை திருமணம் செய்துவைக்க முடிவு செய்தனர்.

இதனால் மனமுடைந்த அருணா கடந்த 21ஆம் தேதி தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டுள்ளார். அருணாவின் தற்கொலையால் அவரது பெற்றோரும் உறவினர்களும் ராகவன் மீது கடும் கோபத்தில் இருந்துள்ளனர்.

காதலியின் தற்கொலை குறித்து கேள்வியுற்று ராகவன் அவரது உடலை பார்க்க கோட்டக்குப்பம் வந்துள்ளார்.

ராகவனின் மீது கொலைவெறியில் இருந்த அருணாவின் உறவினர்கள், அவரை அங்குள்ள அய்யனார்கோவில் பின்புறம் ஆளரவமற்ற இடத்துக்கு கடத்திச் சென்று அரிவாளால் வெட்டியும் பெட்ரோல் ஊற்றி எரித்தும் கொன்றதாகக் கூறப்படுகிறது. தகவலறிந்து வந்த போலீசார், ராகவனின் உடலை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.

தனிப்படை அமைத்து விசாரணையில் இறங்கிய போலீசார், அருணாவின் அண்ணன் அருண்குமார் உட்பட 7 பேரை கைது செய்தனர். தலைமறைவாக உள்ள முக்கிய குற்றவாளியான அருணாவின் தாய்மாமன் “குட்ட” ரமேஷ் என்பவனை தேடி வருகின்றனர்.

காதலியின் இறப்புக்கு வந்த காதலன் கடத்திச் செல்லப்பட்டு கொடூரமாக கொல்லப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.