​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
வீட்டில் உறங்கிக்கொண்டிருந்த தம்பதியைக் கொன்று நகை திருடிய வழக்கில் கல்லூரி மாணவர்கள் கைது

Published : Feb 25, 2020 2:35 PM

வீட்டில் உறங்கிக்கொண்டிருந்த தம்பதியைக் கொன்று நகை திருடிய வழக்கில் கல்லூரி மாணவர்கள் கைது

Feb 25, 2020 2:35 PM

திருச்சி மாவட்டம் மண்ணச்சநல்லூர் அருகே வீட்டில் உறங்கிக்கொண்டிருந்த தம்பதியை கொலை செய்துவிட்டு நகைகளை திருடிச் சென்ற வழக்கில் கல்லூரி மாணவர்கள் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

பெரகம்பி கிராமத்தைச் சேர்ந்த ரமேஷ் - லதா தம்பதியர், கடந்த 2018ஆம் ஆண்டு ஏப்ரல் 23ஆம் தேதி தங்களது வீட்டு வாசலில் கட்டிலில் உறங்கிக் கொண்டிருந்தனர்.

நள்ளிரவில் வந்த மர்ம நபர்கள் இருவரையும் வெட்டிக் கொன்றுவிட்டு 10 சவரன் நகைகள், இருசக்கர வாகனத்தை திருடிச் சென்றனர்.

சம்பவம் தொடர்பாக  விசாரித்து வந்த போலீசார், பெரம்பூர் ரோவர் கல்லூரியில் படித்து வருவதாகக் கூறப்படும் பழனிசாமி, நிஷாந்த் ஆகியோரை கைது செய்துள்ளனர். நகைக்காக இருவரையும் கொலை செய்ததை அவர்கள் ஒப்புக்கொண்டதாக போலீசார் தெரிவித்தனர்.