​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
திருவாரூரில் முதலமைச்சருக்கு பாராட்டு விழா நடத்த விவசாய சங்கங்கள் திட்டம்

Published : Feb 25, 2020 12:55 PM

திருவாரூரில் முதலமைச்சருக்கு பாராட்டு விழா நடத்த விவசாய சங்கங்கள் திட்டம்

Feb 25, 2020 12:55 PM

காவிரி டெல்டாவை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவித்ததற்கு நன்றி தெரிவித்து, திருவாரூரில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு அடுத்த மாதம் 7ம் தேதி பாராட்டு விழா நடத்த விவசாய சங்கங்கள் திட்டமிட்டுள்ளன.

சேலம் மாவட்டம் தலைவாசலில் கடந்த 9ஆம் தேதி நடைபெற்ற விழாவில் பேசிய முதலமைச்சர், காவிரி டெல்டா பகுதிகளை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவித்தார். அதற்கான மசோதாவும் சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்டது.

இதற்கு நன்றி தெரிவிக்கும் வகையில், தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம் ஆகிய மாவட்டங்களை சேர்ந்த விவசாய சங்க கூட்டமைப்பினர் பாராட்டு விழா எடுக்க திட்டமிடப்பட்டுள்ளனர். இதற்கான ஒப்புதலை முதலமைச்சரிடம் பெற்று நாளை முறைப்படி அறிவிக்கின்றனர்.