​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
டு பிலெஸ்சிஸ் மற்றும் டேவிட் மில்லர் இணைந்து கேட்ச் செய்த வீடியோ

Published : Feb 24, 2020 5:30 PM

டு பிலெஸ்சிஸ் மற்றும் டேவிட் மில்லர் இணைந்து கேட்ச் செய்த வீடியோ

Feb 24, 2020 5:30 PM

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 20 ஓவர் போட்டியில், மிட்சல் மார்ஷ் அடித்த பந்தை, டு பிலெஸ்ஸிசும், டேவிட் மில்லரும் இணைந்து, அட்டகாசமாக கேட்ச் செய்து அவுட் ஆக்கிய வீடியோ வைரல் ஆகிவருகிறது.

போர்ட் எலிசபெத்தில் நடைபெற்ற தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான 2ஆவது 20 ஓவர்  போட்டியில் களமிறங்கிய ஆஸ்திரேலிய வீரர், மிட்சல் மார்ஷ், லுங்கி நிகிடி வீசிய பந்தை, எல்லைக்கோட்டை நோக்கி தூக்கி அடித்தார்.

அதிக உயரத்தில் எழும்பிய பந்தை, எல்லைக்கோடு அருகே நின்றுகொண்டிருந்த டு பிளெசிஸ், மைதானத்திற்குள் லாவகமாக தட்டிவிட்டார். அதை அருகில் நின்ற டேவிட் மில்லர், அசத்தலாக கேட்ச் செய்து அவுட் ஆக்கினார்.