​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
ஈரானில் 50 பேர் கொரானாவுக்கு பலி

Published : Feb 24, 2020 5:01 PM

ஈரானில் 50 பேர் கொரானாவுக்கு பலி

Feb 24, 2020 5:01 PM

ஈரானில், ஷியாக்களின் முக்கிய மதக் கல்வி நகரமாக விளங்கும் குவோம் (Qom) நகரில், இந்த மாதம் மட்டும் ,50 பேர் கொரானா தொற்றுக்கு உயிரிழந்து விட்டதாக, அரசின் கட்டுப்பாட்டில் இருக்கும் ILNA செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.

இது கடந்த 13 ஆம் தேதி நிலவரம் என்று கூறியுள்ள ILNA, 270 பேர் நோய் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டதாகவும் தெரிவித்துள்ளது. இதனிடையே ஈரான் மற்றும் இத்தாலியில் கொரானா பரவும் வேகம் அதிர்ச்சியும், கவலையும் அளிப்பதாக உலக சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது.

ஈரானின் பல நகரங்களில் பள்ளிகள் மூடப்பட்டுள்ள நிலையில் அண்டை நாடுகள் தங்களது எல்லைகள் அடைத்துள்ளதாகவும் தகவல் கிடைத்துள்ளது.