​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
பெண் குழந்தைகள் பாதுகாப்பு தினத்தை ஒட்டி அனைத்துப் பள்ளிகளிலும் உறுதிமொழி ஏற்க உத்தரவு

Published : Feb 24, 2020 7:14 AM

பெண் குழந்தைகள் பாதுகாப்பு தினத்தை ஒட்டி அனைத்துப் பள்ளிகளிலும் உறுதிமொழி ஏற்க உத்தரவு

Feb 24, 2020 7:14 AM

மாநில பெண் குழந்தைகள் பாதுகாப்பு தினத்தை ஒட்டி அனைத்துப் பள்ளிகளிலும், மாணவர்கள் அது தொடர்பான உறுதிமொழி ஏற்க வேண்டும் என பள்ளிக் கல்வித் துறை உத்தரவிட்டுள்ளது.

முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் பிறந்த நாளான பிப்ரவரி 24-ஆம் தேதியை, ஆண்டுதோறும் மாநில பெண் குழந்தைகள் பாதுகாப்பு தினமாகக் கொண்டாட தமிழக அரசு முடிவு செய்துள்ளது.

இதையொட்டி இன்று பள்ளிகள் மற்றும் அரசு அலுவலகங்களில், பெண் குழந்தைகள் பாதுகாப்பு தொடர்பான உறுதிமொழி எடுக்க, அரசு உத்தரவிட்டுள்ளது. அதன்படி, பெண் குழந்தைகள் பாதுகாப்பை வலியுறுத்தும் வகையிலான உறுதிமொழி தொடர்பான விவரத்தை, பள்ளிக் கல்வித் துறை அனைத்துப் பள்ளிகளுக்கும் அனுப்பியுள்ளது.