​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
அயோத்தியில் புதிதாக மசூதி கட்டுவது தொடர்பாக சன்னி வக்ஃபு வாரியம் இன்று முடிவெடுப்பு..!

Published : Feb 24, 2020 6:38 AM

அயோத்தியில் புதிதாக மசூதி கட்டுவது தொடர்பாக சன்னி வக்ஃபு வாரியம் இன்று முடிவெடுப்பு..!

Feb 24, 2020 6:38 AM

அயோத்தியில் புதிதாக மசூதி கட்டுவது தொடர்பாக சன்னி வக்ஃபு வாரியம் இன்று கூடி முடிவெடுக்க உள்ளது.

ராமர் கோயில், பாபர் மசூதி பிரச்னைக்குப் பின் உச்ச நீதிமன்றம் அளித்த தீர்ப்பின்படி அயோத்தியில் புதிய மசூதி கட்டுவதற்கு 5 ஏக்கர் நிலம் வழங்க வேண்டும் என்றும், ராமர் கோயில் கட்டுவதற்கு அறக்கட்டளை அமைக்கவும் உத்தரவிட்டிருந்தது.

இதையடுத்து கோயில் கட்டுவது தொடர்பாக அறக்கட்டளை அமைக்கும் பணிகள் வேகமாக நடந்து வருகின்றன. இந்நிலையில் மசூதி கட்டுவதற்கு மாநில அரசு வழங்கிய நிலம் குறித்து உத்தரபிரதேச சன்னி மத்திய வக்ஃப் வாரியம் இன்று தனது கூட்டத்தில் முடிவெடுக்கும் என்று வக்ஃபு வாரியத் தலைவர் ஜூபர் பரூக்கி தெரிவித்துள்ளார்.

மேலும் மசூதி கட்டுவது தொடர்பாகவும் அறக்கட்டளை அமைக்கப்பமா என்பது குறித்தும் விவாதிக்க இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.