​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
இந்திய அணி நிதான ஆட்டம்...

Published : Feb 23, 2020 1:22 PM

இந்திய அணி நிதான ஆட்டம்...

Feb 23, 2020 1:22 PM

நியூசிலாந்த் அணிக்கு எதிரான வெலிங்டன் டெஸ்ட் போட்டியில் 2ஆவது இன்னிங்சில் இந்தியா 4 விக்கெட் இழப்புக்கு 144 ரன்களை எடுத்துள்ளது.

போட்டியின் 3ம் நாளான இன்று முதல் இன்னிங்சை தொடர்ந்து விளையாடிய நியூசிலாந்து அணி, மேலும் 132 ரன்களை சேர்த்து, 348 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்தது. இந்திய அணி தரப்பில் அதிகபட்சமாக இசாந்த் சர்மா 5 விக்கெட்டுகளை சாய்த்தார்.

இதன்பின்னர் 183 ரன்கள் பின்தங்கிய நிலையில், 2ஆவது இன்னிங்சை இந்தியா தொடர்ந்தது. பிருத்வி ஷா, புஜாரா, கோலி ஆகியோர் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்து ஏமாற்றமளித்தனர். மயங்க் அகர்வால் நிலைத்து நின்று அரைசதம் கடந்த நிலையில் 58 ரன்களில் ஆட்டமிழந்தார்.

3ம் நாள் முடிவில் 39 ரன்கள் பின்தங்கிய நிலையில், 4 விக்கெட் இழப்புக்கு 144 ரன்களை இந்தியா சேர்த்திருந்தது. ரஹானேயும், விஹாரியும் ஆட்டமிழக்காமல் இருந்தனர்.