​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
நாய்க்குட்டியை பிடிப்பதற்காக துரத்திச் சென்று கிணற்றில் விழுந்த சிறுத்தை

Published : Feb 23, 2020 11:14 AM



நாய்க்குட்டியை பிடிப்பதற்காக துரத்திச் சென்று கிணற்றில் விழுந்த சிறுத்தை

Feb 23, 2020 11:14 AM

மகாராஷ்டிராவில் கிணற்றில் விழுந்த சிறுத்தையையும், நாய்க்குட்டியையும், 4 மணி நேரப் போராட்டத்துக்கு பின்னர் வனத்துறையினர் மீட்டனர்.

நந்தூர்பார் மாவட்டம் தெம்பே கிராமப் பகுதியிலுள்ள கிணறு ஒன்றில், நாய்க்குட்டி ஒன்றும், சிறுத்தை ஒன்றும் விழுந்து கிடந்தன. நாய்க்குட்டியை பிடிப்பதற்காக சிறுத்தை துரத்திச் சென்ற போது இரண்டும் கிணற்றில் விழுந்ததாக கூறப்படுகிறது.

தகவலறிந்து வந்த வனத்துறையினர் மார் 7 மணி நேரம் கிணற்றுக்குள் சிக்கியிருந்த சிறுத்தையை நீண்ட போராட்டத்துக்கு பின்னர் கூண்டு வைத்து  பிடித்தனர். மேலும் நாய்க்குட்டியையும் கிணற்றிலிருந்து மீட்டனர்.