​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
"ராமர்கோவில் திட்டமிட்டபடி மூன்றரை ஆண்டுகளில் கட்டி முடிக்கப்படும்"

Published : Feb 23, 2020 7:36 AM

"ராமர்கோவில் திட்டமிட்டபடி மூன்றரை ஆண்டுகளில் கட்டி முடிக்கப்படும்"

Feb 23, 2020 7:36 AM

அயோத்தியில் கட்டப்படும் பிரம்மாண்டமான ராமர் கோவில் திட்டமிட்டபடி ஆறு மாதத்திற்குள் தொடங்கும் என்றும், கட்டுமானப் பணி ஆரம்பித்த நாளிலிருந்து, மூன்றரை ஆண்டுகளுக்குள் கோவில் கட்டி முடிக்கப்படும் என்றும் அறக்கட்டளை உறுப்பினரான கோவிந்த் தேவ் கிரிஜி மகாராஜ் (Govind Dev Giriji Maharaj) தெரிவித்துள்ளார்.

உச்சநீதிமன்றத்தின் கட்டளைப்படி அமைக்கப்பட்ட அறக்கட்டளை குழுவினர் அண்மையில் பிரதமர் மோடியை சந்தித்து ராமர் கோவில் குறித்து ஆலோசனை நடத்தினர்.

இது தொடர்பாக செய்தியாளர்களிடம்  பேசிய கிரி மகராஜ், அக்சர்தாம் கோவில் 3 ஆண்டுகளில் கட்டப்பட்டதைப் போல் ராமர்கோவிலும் சிறப்பாக கட்டி முடிக்கப்படும் என்று தெரிவித்துள்ளார்.