​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
சிறுபான்மை மக்களின் நம்பிக்கைக்குரிய அரணாக அ.தி.மு.க. செயல்படும்..!

Published : Feb 21, 2020 6:23 PM

சிறுபான்மை மக்களின் நம்பிக்கைக்குரிய அரணாக அ.தி.மு.க. செயல்படும்..!

Feb 21, 2020 6:23 PM

சிறுபான்மை மக்களின் நம்பிக்கைக்குரிய அரணாக அ.தி.மு.க. செயல்படும் என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் தெரிவித்துள்ளனர்.

இது தொடர்பாக கூட்டாக வெளியிட்ட அறிக்கையில், அசாம் மாநிலம் தொடர்புடைய தேசிய குடிமக்கள் பதிவேடு உச்சநீதிமன்ற வழிகாட்டுதலின் படி மேற்கொள்ளப்படும் நடவடிக்கையே தவிர நாடு முழுவதற்கும் உரியது அல்ல என்று கூறப்பட்டுள்ளது.

மக்கள் தொகை கணக்கெடுப்பு அடிப்படையில் காங்கிரஸ் ஆட்சியில் கொண்டு வரப்பட்ட தேசிய மக்கள் தொகை பதிவேடு, ஆவணங்கள் ஏதும் இன்றி குடும்பத்தினர் தெரிவிக்கும் தகவலின் படி பதிவு செய்யப்படுவதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டில் சிறுபான்மை சகோதர சகோதரிகளுக்கு எந்த அநீதியும் இழைக்கப்படாது என்றும் அவர்களுக்கு எதிரான எந்த செயலையும் அரசு அனுமதிக்காது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.