​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
உயர் கல்வியில் தமிழகம் நாட்டிலேயே முதலிடம் - முதலமைச்சர்

Published : Feb 21, 2020 5:21 PM

உயர் கல்வியில் தமிழகம் நாட்டிலேயே முதலிடம் - முதலமைச்சர்

Feb 21, 2020 5:21 PM

கடந்த 9 ஆண்டுகளில் உயர் கல்வியில் தமிழகம் 49 சதவீத வளர்ச்சியை எட்டி நாட்டிலேயே முதலிடத்தில் இருப்பதாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கூறினார்.

சென்னையை அடுத்த திருப்போரூர் அருகே உள்ள காலவாக்கத்தில் SSN பொறியியல் கல்லூரி பட்டமளிப்பு விழாவில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உரை நிகழ்த்துகையில் இதனை தெரிவித்தார். மேலும் கிராமத்தில் பிறந்து வளர்ந்த தான், பட்டம் படித்தவர்களுக்கு பட்டம் வழங்குவது பெருமை அளிப்பதாகவும் குறிப்பிட்டார்.

விழாவில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஆயிரத்து ஒன்பது (1009) மாணவ, மாணவியர்களுக்கு பட்டங்களை வழங்கினார். உயர் கல்வித்துறை அமைச்சர் கே.பி.அன்பழகன் உள்ளிட்டோர் இதில் பங்கேற்றனர்.